நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜனவரி 17-ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.
கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிய போவதாக கூறியுள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் பிரபல இயக்குனரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவனுக்கு தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்பது முன்கூட்டியே தெரியும் என்று கூறப்படுகிறது.
அதாவது செல்வராகவன் சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் வாழ்க்கை தத்துவங்கள் பற்றி பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் கடந்த மாதம் “வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது தயவுசெய்து எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து அந்த பிரச்சனையை பற்றி யோசிப்போம் என்று விட்டுவிடுங்கள்.
பிறகு இரண்டு நாள் கழித்து ஒன்று பிரச்சனையே இருக்காது அல்லது சரியான முடிவெடுக்கும் மனநிலையில் நீங்கள் இருப்பீர்கள்” என்று பதிவிட்டிருந்தார். அப்போது ரசிகர்கள் அந்த பதிவினை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது தனுஷ்-ஐஸ்வர்யா பிரிய போகிறார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்து தான் செல்வராகவன் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.