ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷின் அண்ணன் மனைவி கீதாஞ்சலி.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் 2004ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தியைக் கேட்ட உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் அவரவர் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா முசாபீர் பாடலை இயக்கி தயாரித்து வருகிறார். அண்மையில் முசாபீர் படப்பிடிப்பு முடிவடைந்ததாக இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார் ஐஸ்வர்யா. இப்பாடலின் அப்டேட்டுகளை அவ்வப்போது இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்த ஐஸ்வர்யா தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இதற்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் தற்போது தனுஷின் அண்ணன் மனைவி கீதாஞ்சலி வாழ்த்து கூறியுள்ளார். இவர் முன்னதாக ஐஸ்வர்யா கொரோனா பாதிப்பில் இருந்த போது அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி இருந்தார் கீதாஞ்சலி குறிப்பிடத்தக்கது.