நடிகர் தனுஷ் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை அண்ணி கீதாஞ்சலி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கஸ்தூரி ராஜா. இதையடுத்து பல திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் விமலா கீதா, கார்த்திகா தேவி என்ற இரண்டு மகள்களும் செல்வராகவன், தனுஷ் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
இதில் தனுஷ் முன்னணி நடிகராகவும் செல்வராகவன் பிரபல இயக்குனராகவும் வலம் வருகின்றார்கள். இந்நிலையில் கஸ்தூரிராஜா தனது 70 ஆவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் விமர்ச்சையாக கொண்டாடியுள்ளார். இதனால் வீடு மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் அனைவரும் பங்கேற்றார்கள். இப்புகைப்படங்களை கீதாஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். அதில் தனுஷ் மட்டுமே இருக்கின்றார். மகன்களும் ஐஸ்வர்யாவும் அதில் இல்லை குறிப்பிடத்தக்கது.