Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி எப்பொழுது….?” வெளியான தகவல்….!!!!!

வாடிவாசல், விடுதலை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி முடித்த பிறகு வட சென்னை இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக வெற்றிமாறன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் தற்பொழுது மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இதில் இயக்குனர் வெற்றிமாறனும் பங்கேற்றார். அப்போது தனுஷுடன் மீண்டும் இணைவது குறித்து பேசி இருக்கின்றார். வெற்றிமாறன் தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் இறுதியாக வெளியான வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அதைத்தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக இருந்த நிலையில் வெற்றிமாறன் விடுதலை, வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட்டாகி விட்டார் இதனால் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வெற்றிமாறன் வாடிவாசல், விடுதலை உள்ளிட்ட திரைப்படங்களை முடித்தவுடன் தனுஷின் படத்தை தான் இயக்க இருப்பதாக கூறியுள்ளார்.

Categories

Tech |