தனுசு ராசி அன்பர்களே..! இன்று செயலில் புதிய திருப்பம் ஏற்படும். உண்மை நிலவரம் உணர்ந்து பணிபுரிய வேண்டும். தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுங்கள். இன்று கொடுக்கல் வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். பெரிய தொகையை கூட எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
எதிர்பாராத பண வரவுகளால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உடல்நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்:-4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்