கடந்த சனிக்கிழமை அன்று பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவு நாட்டில் கடலுக்குள் எரிமலை வெடித்து சிதறியது. இதனால் அந்த தீவு நாட்டை சுனாமியும் பயங்கரமாக தாக்கியது. மேலும் டோங்கா நாட்டுக்கு 5 நாட்கள் பிறகே வெளியுலக தொடர்பும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் சுனாமி அலையால் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 57 வயதான லிசாலா ஃபொலாவு என்ற மாற்றுத்திறனாளி முதியவர் சந்தித்த துயரங்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அந்த மாற்றுத்திறனாளி முதியவர் கிட்டத்தட்ட கடலில் 27 மணி நேரம் போராடி அதன் பிறகே கரையை சேர்ந்துள்ளார். இந்த போராட்டத்தின் போது அந்த முதியவர் கடலில் சுமார் 9 முறை மூழ்கி இருக்கிறார். இருப்பினும் எப்படியாவது உயிர் பிழைத்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னம்பிக்கையுடன் போராடி கரைக்கு வந்து சேர்ந்துள்ளார்.