Categories
மாநில செய்திகள்

“தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலம்”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!

தேசிய தன்னார்வ ரத்ததான நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ரத்ததானம் மூலமாக மதிக்கத்தக்க மனித உயிர்களை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதல் திங்கள் கிழமை தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்திடும் விதமாக விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் ஐந்து லிட்டர் ரத்தம் இருக்கிறது.

ஆனால் ரத்ததானத்தின் போது 350 மில்லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது ரத்ததானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும் இந்த ரத்த தானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகளை செய்து கொள்ளலாம். மேலும் தானமாக பெறப்படும் ஓரலகு ரத்தம் மூன்று உயிர்களை காப்பாற்றும் உரிய கால இடைவெளியில் ரத்ததானம் செய்து கொள்வதினால் உடலில் புதிய செல்கள் உருவாகி அவர்கள் உடல் நலன் பாதுகாக்கப்படுகின்றது.  அரசு ரத்த தான மையங்கள் மற்றும் தன்னார்வ ரத்ததான முகாம்களில் ரத்த தானம் செய்து கொள்ளலாம் ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e- Raktkosh என்ற வலைதளம் செயல்பாட்டில் இருக்கிறது.

பொதுமக்கள் இந்த தளத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் ரத்தம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கடந்த வருடம் அரசு மற்றும் தனியார் ரத்ததான மையங்கள் மூலமாக 90% ரத்தம் சேகரிக்கப்பட்டு தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் நடபாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100% இலக்கை எய்திடவும் விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றிட பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் தன்னார்வ ரத்ததானம் செய்திட முன் வரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |