தென்காசியில் மகனின் பள்ளி தோழியை இரண்டாவதாக திருமணம் செய்த தந்தையை சொத்து பிரச்சனை காரணமாக மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், கடையதை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் திருக்குமரன். திருக்குமரனுக்கு பள்ளி காலத்தில் இருந்து சண்முகப்பிரியா என்று தோழி இருந்து வந்துள்ளார். 12 வருடங்களுக்கு முன்பு சண்முகசுந்தரியை இரண்டாவதாக தந்தை தங்கராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் திருக்குமரன், தங்கராஜ் இடையே தகராறு ஏற்படவே, திருக்குமரன் தனது தாயுடன் புலவனூர் சென்றுவிட்டார். இந்நிலையில் சொத்துக்களை பிரித்து தரும்படி திருக்குமரன் அடிக்கடி தங்கராஜிடம் கேட்டு வந்துள்ளார்.
இதனால் சமீபத்தில் சொத்தை பிரித்த தங்கராஜ், முதல் மனைவிக்கு 15 ஏக்கரும், இரண்டாவது மனைவிக்கு 25 ஏக்கரும் பிரித்து கொடுத்துள்ளார். இதனால் முதல் மனைவி மகனான திருகுமரன் தங்கராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தங்கராஜை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார். பின்னர் அவராகவே சென்று காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.