நெல்லையிலிருக்கும் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கையெடுக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது மீது மானூரிலிருக்கும் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு உள்ளது. இதனால் இவர் அவ்வழக்கின் தொடர்பாக காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமினில் கையெழுத்துப் போடுகிறார். இதனையடுத்து அந்த வழக்கின் தொடர்பாக அவருடைய பைக்கை காவல்துறையினர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் செந்தில்குமார் காவல் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்த போது அவருடைய மோட்டார் சைக்கிளை பார்த்துள்ளார். மேலும் காவல்துறையினருடைய அனுமதியைப் பெறாமல் செந்தில்குமார் பைக்கை எடுத்திருக்கிறார். இதனைக்கண்ட காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.