தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது என்பது சமீப காலமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து என்கின்ற 24 வயது பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டது மட்டுமல்லாமல் ஹனிமூன் சென்றும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில் அதுபோல மற்றொரு சம்பவம் அரங்கே இருக்கிறது. இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கனிஷ்கா சோனி. அதிலும் குறிப்பாக இவர் நடித்த தியா அவுர் பாத்தி ஹம் எனும் சீரியல் தமிழில் என் கணவன் என் தோழன் என்னும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை கனிஷ்கா தற்போது தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் கழுத்தில் தாலி மற்றும் நெற்றியில் குங்குமத்துடன் வீடியோ வெளியிட்டு அவர் தன் சுயநினைவோடு தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இது பற்றி மேலும் அவர் கூறியதாவது தனிமை தான் எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது. நான் நினைத்தபடி எந்த ஒரு ஆணையும் இதுவரை என் வாழ்நாளில் சந்திக்கவில்லை அதனால் தனியாகவே இருக்க முடிவு செய்து இருக்கின்றேன். திருமணம் என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அதில் காதல் நேர்மை போன்றவையும் இருக்க வேண்டும் நான் குடித்துவிட்டு இவ்வாறு சொல்லவில்லை. எனக்கு குடிப்பழக்கம் கிடையாது என தெரிவித்துள்ளார் இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து பதிவிட்டு வருகின்றார்கள்.