கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் நூர் சுல்தானில் உலக மத தலைவர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் இதில் கலந்துகொள்ள கஜகஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு அரசு முறை பயணமாக சீன அதிபர் ஜின்பிங் சென்றுள்ளார். இதனை அறிந்த வாடிகன் அதிகாரிகள் போப்பாண்டவர் பிரான்சிஸ் சீன அதிபரை சந்திக்க நேரம் கேட்டிருக்கின்றனர். ஆனால் சீனா அதிபருக்கு பல்வேறு பணிகள் இருப்பதால் போப்பாண்டவரை சந்திக்க நேரம் ஒதுக்க இயலாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனை வாடிகன் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். போப்பாண்டவர் தன்னை சந்திக்க விரும்பியதை பாராட்டுகின்றோம் ஆனால் உரிய நேரமில்லாத காரணத்தினால் தற்போதைக்கு அவரை சந்திக்க இயலாது என தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சீனாவில் கத்தோலிக்க மதத்தின் ஆயர்களை நியமிப்பது பற்றி ஏற்கனவே சீனாவுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்ட போப்பாண்டவரின் வாடிகன் அலுவலகம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இது பற்றி பேசவே போப்பாண்டவர் பிரான்சிஸ் சீன அதிபரை சந்திக்க நேரம் கேட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.