Categories
தேசிய செய்திகள்

தன்னை தானே திருமணம்….. “இந்து மதத்திற்கு எதிரானது”….. வலுக்கும் எதிர்ப்பு…..!!!!

குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து(24). சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வரும் ஜூன் 11ஆம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதனால் தற்போது அவர் மும்முரமாக திருமணத்திற்கு தயாராகி வருகிறார். வழக்கமான திருமணம் போன்றது தான் இவரது திருமணமும். ஆனால் ஒரு ட்விஸ்ட். மணமகன் மட்டும் இல்லை. அதாவது ஷாமா பிந்து தன்னை தானே திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் இந்தியாவிலேயே பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு முதல்முறையாக குஜராத்தில் நடைபெறவுள்ளது. இந்த திருமணம் மூலம் தன்னை தானே காதலிக்கப் போவதாக தெரிவித்துள்ள அவர் திருமணம் முடிந்த பின்னர் இரண்டு வாரம் ஹனிமூனுக்கு கோவாவுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவர் கூறியதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், மற்ற சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தற்போது குஜராத் பாஜக நகர பிரிவின் துணைத் தலைவர் சுனிதா சுக்லா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் பிந்து மனநிலை சரியில்லாதவர். இதுபோன்ற திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது. இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும். அவர்கள் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ள எந்த கோவிலிலும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்து கலாச்சாரத்தில் ஒரு ஆண் ஆணையோ, ஒரு பெண் பெண்ணையோ திருமணம் செய்து கொள்ளலாம் என எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |