Categories
Uncategorized

தன்னை பற்றிய மீம்களை… தனது ட்விட்டரிலேயே பகிர்ந்து மகிழும் சசி தரூர்… அதை நீங்களே பாருங்க…!!!

தன்னைப் பற்றி வரும் மீம்களை தன்னுடைய பேஸ்புக்கிலேயே பகிர்ந்து மகிழ்ந்து வருகிறார் சசிதரூர்.

சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் போன்றவர்களை விமர்சித்து மீம்ஸ்கள் வருவது வழக்கம். அதேபோல் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தன்னைப் பற்றிய சமூக தளங்களில் பரவி வந்த மீம்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. சசிதரூர் கேரளாவில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு சென்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்.

அங்கு ஒரு கோயிலில் சிதறுதேங்காயை சசிதரூர் உடைத்தார். இந்த படத்தை வைத்து பலரும் மீம்களை உருவாக்கியிருந்தனர். கிரிக்கெட் மைதானம், தேநீர் கடை, பரத நாட்டிய மேடை என பல பின்னணியில் சேர்க்கப்பட்டு மீம்களை உருவாக்கி வைத்திருந்தனர். இதைப் பார்த்தால் சிரிப்பு வரும் வருவதாக கூறி அவற்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் சசிதரூர் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |