தன்னைவிட 13 வயது குறைவான ஆட்டோ ஓட்டுநருடன் ஒரு கோடீஸ்வரனின் மனைவி ஓடிப் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரின் கஜ்ரனா என்ற பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 47 லட்சம் பணத்துடன் மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் கோடீஸ்வரரின் மனைவியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அவர்களின் செயல்பாடுகளை குறித்து அவரது கணவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அடிக்கடி வெளியில் பயணம் செய்வதற்கு வாடகை ஆட்டோ ஒன்றை பயன்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரித்தபோது ஆட்டோ ஓட்டுநரும், அதே 13ஆம் தேதி மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இருவரும் ஓடி போனதை உறுதி செய்த காவல்துறையினர், அவர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். அந்த ஆட்டோ ஓட்டுனரின் பெயர் இம்ரான் எனவும், அவருக்கு 32 வயது ஆகிறது எனவும் தெரியவந்துள்ளது, மேலும் இவர்கள் இருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததும் கண்டறியப்பட்டது. ஆட்டோ ஓட்டுநரான இம்ரான் நண்பன் ஒருவரிடமிருந்து கோடீஸ்வரருக்கு சொந்தமான 33 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கோடீஸ்வரன் மனைவியும், ஆட்டோ ஓட்டுநரும் ஒரு இடத்தில் தங்காமல் அடிக்கடி இடத்தை மாற்றி சென்று வருவதால் காவல்துறையினருக்கு பிடிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பணத்தை எடுத்துக்கொண்டு தன்னைவிட 13 வயது குறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநருடன் மனைவி ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.