தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்தான் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தது. இவற்றில் பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றி அடைந்தது. ஆனால் கோப்ரா எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்திசெய்யவில்லை.
THROWBACK | @chiyaan ❤️❤️ pic.twitter.com/QK7b3hmq8z
— Venkatramanan (@VenkatRamanan_) October 28, 2022
அத்துடன் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் தனது படத்திற்காக மக்கள் மத்தியில் சென்று விக்ரம் ப்ரோமோஷன் செய்துள்ளார். அப்போது தன் ரசிகர் ஒருவருக்கு அவரே தனது கையில் டீ போட்டு கொடுத்துள்ள வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.