Categories
சினிமா தமிழ் சினிமா

தன் செல்ல மருமகனுடன் காரில் பயணம் செய்த சிம்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

நடிகர் சிம்பு தனது சகோதரியின் மகனுடன் காரில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. நடிகர் சிம்பு சமூக வலைத்தளங்களில் தனது படம் குறித்த அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார் .

தற்போது தனது சகோதரியின் மகன் ஜோசனுடன் காரில் செல்லும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்‌. தனது செல்ல மருமகனுடன் சிம்பு காரில் பயணம் செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . மேலும் இந்த வீடியோவில் உள்ள ஜோசனின் ஹேர் ஸ்டைல் சிறுவயதில் சிம்புவை பார்ப்பது போல் உள்ளது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றார்கள் .

Categories

Tech |