லாகூரில் நடைபெற்ற பேரணியின்போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்து பாராட்டியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கொண்டுள்ளது. ரஷ்யா மீது அனைத்து நாடுகளும் பொருளாதார தடை விதித்த போதும் அங்கிருந்து துணிச்சலுடன் எரிவாயு இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அனைத்து தரப்பு மக்களையும் நலம் பெறச் செய்யும். ஆனால்
பாகிஸ்தானில் அப்படி அல்ல ஒரு சிலர் மட்டுமே வெளியுறவு கொள்கை மூலம் நன்மை அடைகின்றனர். சுதந்திரமான வெளியுறவு கொள்கையை கொண்டு வர எண்ணியதற்கு தான் என் பதவி பறிக்கப்பட்டது. சில அந்நிய சக்திகளால் பாகிஸ்தான் இயக்கப்படுகிறது!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.