லெபனான் நாட்டைச் சேர்ந்த பெண் ஷலி ஹபீஸ். இவர் தன்னுடைய சகோதரியின் புற்றுநோயின் சிகிச்சைக்காக வங்கி ஒன்றில் இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் வரை சேமித்து வந்துள்ளார். இதனை அடுத்து தன்னுடைய சகோதரியின் சிகிச்சைக்காக வங்கியில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் மாதத்திற்கு 15 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் சகோதரிக்கு சிகிச்சை மேற்கொள்ள சிரமம் உண்டாகும் என்பதை உணர்ந்த அவர் வங்கியால் பாதிக்கப்பட்ட தன்னார்வலர்களோடு இணைந்து பொம்மை துப்பாக்கியை காட்டி வங்கியில் உள்ள தன்னுடைய சேமிப்பு தொகையை கொள்ளையடித்துள்ளார்.
பாதுகாப்பு படையினர் வருவதற்குள் பின்பக்க ஜன்னலை உடைத்துக்கொண்டு ஹபீஸ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். இதனை சமூக வலைதளங்களில் நேரடியாகவும் ஹபீஸ் ஒளிபரப்பு செய்துள்ளார் l. கடும் பொருளாதார நெருக்கடியில் லெபனான் நாடு சிக்கி தவித்து வருவதால் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.