Categories
தேசிய செய்திகள்

“தன் மகளோடு சேர்த்து மொத்தம் 5 பெண்கள்”…. ஒரே மேடையில்…. தந்தை என்ன செஞ்சிருக்காருனு பாருங்க….!!!!

இந்தியாவிலுள்ள கேரளாவில் தந்தை ஒருவர் தனது மகளின் திருமணத்தோடு 2 இந்து பெண்கள் உட்பட 5 பேருக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளார்.

இந்தியாவிலுள்ள கேரளாவில் சலீம் ரூபனா என்ற தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இவர்களது மகளுக்கு சலீம் வரதட்சணை எதுவும் கேட்காத மாப்பிள்ளையாக தேடிப்பிடித்து திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார். அதன்படியே சலீமின் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆடம்பரத்தை விரும்பாத சலீம் தன்னுடைய மகளின் திருமணத்தின் போது 2 இந்து பெண்கள் உட்பட 5 பேருக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளார்.

மேலும் சலீம் தன் மகளோடு சேர்த்து மொத்தமாக 6 பெண்களுக்கும் சுமார் 10 சவரன் நகைகளையும் வழங்கியுள்ளார். அதோடு மட்டுமின்றி சலீம் தன் மகளுக்கு எடுத்த திருமண புடவை போன்றே மற்ற 5 பெண்களுக்கும் எடுத்துள்ளார். இவருடைய இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Categories

Tech |