Categories
மாநில செய்திகள்

“தபால்காரரை போல் மாஜிஸ்திரேட் செயல்படக்கூடாது”…. உத்தரவை ரத்து செய்த நீதிபதி….!!!!!!!!!

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் முக கவசம் அணியாமல் சென்ற  பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது கணவரை வழிமறித்த போலீசார் முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது அவர்கள் வாக்குவாதம் செய்ததால் வழக்கறிஞரின் கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தன்னை தாக்கியதாக பெண் வழக்கறிஞரின் கணவர் வடபழனி காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் அடிப்படையில் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்ய விருகம்பாக்கம் போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவை எதிர்த்து ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் போலீசார் தாக்கியதற்கு ஆதாரமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ சான்றிதழ் பெண் வழக்கறிஞரும் அவரது கணவரும் தாக்கப்பட்டனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் அது டாக்டர்கள் எழுதிக் கொடுத்த வைட்டமின் மாத்திரை சீட்டு என்பதை கூட பார்க்காமல் இயந்திரத்தனமாக சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆவணங்களை சரியாக பரிசீலனை செய்யாமல் புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு தபால்காரரை போல மாஜிஸ்திரேட் செயல்படக்கூடாது எனவும் இதுபோல புகார் மனு தாக்கல் செய்யும்போது அது பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அறிவுறுத்திய  நீதிபதி காவல் ஆய்வாளரை பழிவாங்க அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |