தபால் துறையின் மாத சேமிப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு மாதம் நிலையான வருமானம் தரும் வகையில் மத்திய அரசு இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. தபால் துறையின் மாத சேமிப்புத் திட்டம் குறித்து இங்குப் பார்ப்போம். தபால் நிலையங்களில் சிறந்த முதலீட்டிற்கான பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதில் இந்த மாத சேமிப்புத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு மாதம் தோறும் நிலையான வட்டித் தொகை வருமானமாகக் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் ரூ.1000 முதல் ரூ4.5 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம்.
18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்றால் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் தனியாகவே, கூட்டாகவோ முதலீடு செய்யமுடியும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் போது வருடம் தோறும் உங்களுக்கு 7.5% வட்டி கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதற்கு முன்பாக முழுப்பணத்தையும் நீங்கள் எடுக்கநேர்ந்தால் மொத்தத் தொகையில் 1% இழப்பீடு செலுத்த நேரிடும்.