நாம் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கக்கூடிய பல அரசுத் திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம். வங்கிகளை போலவே மக்களுக்கு பயனுள்ள பல வகையான சேமிப்புத் திட்டங்களை இந்திய தபால் துறை வழங்கி வருகின்றது. அதில் ஒன்று தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இது ஒரு சிறந்த முதலீடு திட்டமாகும். சிறு பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக நல்ல வருமானத்தை பெற முடியும். அதற்கான பிபிஎஃப் கணக்கை அருகில் உள்ள எந்த ஒரு தபால் நிலையத்திற்கு சென்று தொடங்கலாம். அனைத்து குடிமகனுக்கும் இந்த உரிமை உள்ளது. இதில் 7.10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
இந்த பிபிஎஃப் கணக்கை திறக்க குறைந்தபட்சம் ரூ .500 மூலம் திறக்க முடியும். ஒவ்வொரு வருடமும் 500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சமாக இந்த கணக்கில் ஒவ்வொரு வருடமும் அதிகபட்சம் 1.5 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இந்த திட்டம் 15 வருடங்களுக்கானது. முதிர்வு காலத்திற்கு முன்பு பணத்தை திரும்பப் பெற முடியாது. ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 5-5 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டிக்க முடியும்.
தபால் அலுவலக பிபிஎஃப் (PPF) கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைகிறது. இந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு கூட்டு வட்டி கிடைக்கும். அதாவது, ஒரு வருடத்தில் ரூ .500 ஐ நீங்கள் டெபாசிட் செய்தால் அதற்கு வட்டி ரூ .30 கிடைக்கிறது என்றால், ஆண்டு முதல் 530 ரூபாய்க்கு வட்டி கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம்:
இந்த திட்டத்தின் கீழ், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ .2 ஆயிரத்தை டெபாசிட் செய்தால், 15 ஆண்டுகளில் நீங்கள் சுமார் ரூ.3,36,000 டெபாசிட் செய்வீர்கள். இதற்கு வட்டி ரூ .2,71,135 கிடைக்கும். உங்களுக்கு மொத்தம் ரூ .6,31,135 கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம்:
நீங்கள் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 வைப்பு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த வைப்புத் தொகை ரூ .18,00,000 ஆக இருக்கும். இதில் ரூ .13,55,679 வட்டி பெறப்படும். அதாவது 15 வருடங்களுக்குப் பிறகு உங்கள் கணக்கில் ரூ. 31,55,679 கிடைக்கும்.