இந்திய தபால் துறை சார்பில் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என்ற பெயரில் வங்கி சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் அனைத்து வசதிகளும் உள்ளன. அதன் வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த புதிய மாற்றத்தின் படி ஒரு லட்சம் ரூபாய் வரையில் பேலன்ஸ் கொண்ட சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் 2 சதவீதமாக இருக்கின்றது. இதற்கு முன்னதாக 2.25 சதவீதம் வட்டி நடைமுறையில் இருந்தது. இதனைப் போலவே ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் 2.25 சதவீதமாக தற்போது குறைந்துள்ளது. இந்த வட்டி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் காலாண்டு அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் இந்திய போஸ்ட் பைமெண்ட் பங்க் வங்கியில் கணக்கு தொடங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய வட்டி வீதத்தில் பயன்பெறலாம். அவர்கள் அனைவருக்கும் கூடுதலாக ஏடிஎம் கார்டு, செக் புக், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் அடல் பென்ஷன் யோஜனா,ஜீவன் ஜோதி பீமா யோஜனா போன்ற பல்வேறு திட்டங்களில் இணைந்து பயன்பெற முடியும் என்றும் இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.