தீபாவளி ஸ்பெஷல் முறுக்கு எப்படி செய்வது என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்: –
தோல் நீக்கியவெள்ளை உளுந்து – 1/2 கப் கப்
அரிசி மாவு – 2 கப்
பொட்டுக்கடலை மாவு – 1/4 கப்
பெருங்காய தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
எள்ளு – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் வெள்ளை உளுந்தினை, பாத்திரத்தில் போட்டு லேசாக நிறம் மாறாமல் வறுத்து எடுக்கவும். ஏன்னெனில், உளுந்தின் நிறம் மாறும் அளவிற்கு முறுக்கின் நிறம் மாறும். அதனை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பின் அரைத்து எடுத்த உளுந்தமாவுடன், 2 கப் அரிசி மாவு மற்றும் 1/4 கப் பொட்டுக்கடலை மாவு சேர்த்து, அதனுடன் பெருங்காய தூள், சீரகம், சிறிதளவு எள்ளு சேர்த்து தேவையான அளவு உப்பினை சேர்த்து கிளறவும்.
இவைகள் அனைத்தையும் 2 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் முறுக்கு அச்சினில் வைத்து முறுக்கினை சற்று இடைவெளியோடு சுத்த வேண்டும். இடைவெளிவிட்டால் தான் முறுக்கு சரியான அளவில் முழுமையாக எண்ணெயில் வேகும்.
முறுக்கு அச்சினில் சுற்றிய முறுக்கை வாணலியில் உள்ள எண்ணெயில் போட்டு நன்றாக வேகவிட்டு நிறம் மாறாமல் எடுத்தால் சுவையான முறுக்கு தயார்.