செய்தியாளர்ட்களிடம் பேசிய கருணாஸ், மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அரசு தயவு கூர்ந்து இதை கவனிக்க வேண்டும். தேவர் சமுதாயம் என்பது தென் மாவட்டத்திலே மட்டுமே இருக்கிறாள் என்று நீங்கள் தவறாக கணக்கு போட்டு கொண்டிருக்கிறீர்கள்…. வட மாவட்டங்களிலே, வன்னியர்களுக்கு நிகராக என்னுடைய முக்குலத்தோர் சமுதாயம் இருக்கிறது. அது வரக்கூடிய தேர்தலிலே பிரதிபலிக்கும். அங்கே இருக்கக்கூடிய அகமுடைய முதலியார்கள், துளுவ அகமுடையார்கள், அகமுடைய உடையார்கள் என பல பட்டங்களிலே அங்கு இருக்கிறார்கள்.
அகமுடையார் கள், செங்குன்றம் முதலியார் கள், அங்கு இருக்கக்கூடிய நாயுடுகள், நாடார்கள் இப்படி எண்ணற்ற சமுதாய மக்கள் இருக்கிறார்கள். பல சமுதாய மக்கள் இருக்கக்கூடிய ஒரு இடத்திலே…. ஒரு சமுதாயத்தை மட்டும் திருப்திப்படுத்த நீங்கள் நினைப்பது…. உங்கள் தலையிலே நீங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு சமமானது.
புரட்சி தலைவி அம்மா அவர்களோடு கிட்டத்தட்ட முப்பது ஆண்டு காலங்கள் வாழ்ந்து… அவர்கள் கூடவே அரசியலிலும் சரி, அவருடைய அவருடைய நலனிலும் சரி, அக்கறை உள்ளவராக… இந்த கட்சிக்காக உழைத்தவர் சின்னம்மா அவர்கள் என்பது எல்லோருமே அறிந்த ஒரு விஷயம் தான்.
ஒட்டுமொத்தமாக இந்த அமைச்சரவையில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் ஒருவர் கூட…. தான் சார்ந்த சமுதாய மக்களுடைய இந்த கோரிக்கைகளும்…. தான் சார்ந்த சமுதாயம் இப்படி புறக்கணிக்க படுகிறது என்கின்றதை எண்ணிப் பார்க்கவில்லை. அவர்கள் யாரும் எனக்கு உறுதுணையாக இல்லை.
முதல்வர் உட்பட துணை முதல்வர் உட்பட அமைச்சர்கள் எல்லாரிடம் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பேசிய என்னை அதிகபட்சமாக சிறைச்சாலை செல்வதற்கு தான் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். அப்பேர்ப்பட்டவர்கள் தமிழகத்திலே எந்த இடத்தில் என்றாலும், வரக்கூடிய தேர்தலிலே முக்குலத்தோர் புளி படை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தோல்விக்காக… எங்கள் சமூகத்திற்கு செய்த துரோகத்திற்காக…. அவர்களை எதிர்த்து நாங்கள் வேலை செய்வோம் என தெரிவித்தார்.