காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடிய குற்றவாளியை 1/2 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் பிடித்துவிட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காவிரி பெரியார் காலத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் நாமக்கல் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பதும், முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்து தினேஷ்குமார் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அந்த பகுதியில் பதுங்கியிருந்த தினேஷ்குமாரை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். இவர் தப்பியோடிய 1/2 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் அவரை பிடித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.