Categories
கொரோனா நாமக்கல் மாவட்ட செய்திகள்

தப்பிய 60 வயது கொரோனா மூதாட்டி …! 7கிலோமீட்டர் வீட்டிற்கு நடந்தே சென்றார் ….!!

நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பித்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு மூதாட்டி ஒருவர் நடந்தே சென்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டிக்கு கடந்த ஜூலை 23ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மூதாட்டி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று  காலை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அம்மூதாட்டியை காணவில்லை என செவிலியர்கள், பணியாளர்கள் தேடினர்.

இந்நிலையில் மூதாட்டி அரசு மருத்துவமனையிலிருந்து 7 கி.மீ தூரமுள்ள தனது வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளார் . இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அலுவலர்களுக்கும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் மூதாட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நாமக்கல் அரசு மருத்துவமனையில் வயதான மூதாட்டி என்றும் பாராமல் அவரை தரக்குறைவாக நடத்தியதால் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு தப்பி வந்து விட்டதாக வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |