போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சுபவர்கள், அதனை கடத்தி விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சாராய கடத்தல்காரர்கள் மற்றும் வியாபாரிகளுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள போலீஸ்காரர்களையும் கண்டுபிடித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் என்பவருக்கு சாராய வியாபாரிகளுடன் ரகசிய தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவர் பணத்தை வாங்கிக்கொண்டு சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு புகார்கள் வந்தது. இதனை அடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சந்திரசேகர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. அதன்படி டி.ஐ.ஜி பாண்டியன் சந்திரசேகரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.