இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் சமீபத்தில் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். இதற்கிடையில் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பி சென்றார். ஆனால் அங்கு அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் சிங்கப்பூரை கடந்த வியாழக்கிழமை சென்று அடைந்தார். அதன் பிறகு அவர் வெள்ளிக்கிழமை தனது பதவியை அங்கு இருந்தபடி ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேவை அனுமதித்ததற்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது வருகைக்கு எதிராக ஒரு ஆன்லைன் மனுவை உருவாக்கியுள்ள தொழில் அதிபர் ரேமண்ட் கோத்தபய மீது சிங்கப்பூர் போலீசில் பணம் மோசடி புகார் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். அவரது ஆன்லைன் மனுவுக்கு 2000 க்கும் மேற்பட்டவர்க்ள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோத்தபயாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபு ராமச்சந்திரன் என்பவரின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் உள்ள பூங்கா ஒன்றில் கடந்த சனிக்கிழமை அமைதியாக இருப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோத்தபயவை அனுமதித்த சிங்கபூரின் முடிவை இலங்கையர்கள் பலரும் எதிர்த்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோத்தபய வருகைக்கு எதிராக சட்டத்தை மீறி யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று சிங்கப்பூர் போலீஸ் எச்சரித்துள்ளது. அதே நேரத்தில் தனது தனிப்பட்ட பயணத்தை விரைவாக முடித்துக் கொண்டு கிளம்புமாறு கோத்தபயயை சிங்கப்பூர் அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.