Categories
உலக செய்திகள்

தப்பி ஓடும் கோத்தபய ராஜபக்சே….. மாலத்தீவு, சிங்கப்பூர் அடுத்து எங்க தெரியுமா?…… வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஜூலை 9 ஆம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். இருப்பினும் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த ஜூலை 13ஆம் தேதி இராணுவ விமானத்தில் தப்பிச் சென்றார். அதனைத் தொடர்ந்து கோத்தப்பையர் ராஜபக்சே மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். இவரின் விசா காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

இதனையடுத்து அவர் சிங்கப்பூரை விட்டு புறப்பட வேண்டும். கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் சிறிது காலம் தொடர்ந்து தங்கி இருக்க அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசு அனுமதி கோரியுள்ளது. இந்நிலையில் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரிலிருந்து இன்று தாய்லாந்து நாட்டில் தஞ்சமடைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் தற்காலிகமாக தஞ்சம் அடைய திட்டம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தங்கள் நாட்டில் தஞ்சம் அடைய கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கூறவில்லை என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்து வருவதற்கு கோத்தபய ராஜபக்சே கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அவர் 90 நாட்கள் எங்கள் நாட்டில் தங்குவதற்கு தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |