நெல்லையில் அரசு மருத்துவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் வாக்கு எண்ணும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், காவல் ஆணையர் அன்பு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு மாவட்ட ஆட்சியர், காவல் அலுவலர்கள் அளித்த பேட்டியில், மாவட்டத்தில் இதுவரை தேர்தல் கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படை யினரால் 29 மது பாட்டில்கள், 64 வேஷ்டிகள், ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம், 7.7 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் விதிகளை மீறியதால் இதுவரை எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் தேர்தல் தொடர்பாக புகார்களை தெரிவிக்க 18004258373 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 8300271237 வாட்ஸ்அப் எண்கள் வெளியிடப்பட்டன. பிரதமர், முதலமைச்சர் விளம்பர படங்கள் குறித்து புகார் வந்தால் பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். தேர்தல் நடத்தை வீதிமீறலில் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டும்.