நெல் கொள்முதல் தொடர்பாக எந்த புகார் இருந்தாலும் 18005993540 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வழியாக தெரிவிக்கலாம் என தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நெல் கொள்முதலில் விவசாயிகளிடமிருந்து சிப்பத்திற்கு 30 ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதோடு அது பத்திரிகையிலும் செய்தியாக வெளியானது. இதனை படித்த முதல்வர் ஸ்டாலின் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியின் தொடர்பு கொண்டு தவற்றைத் திருத்திக் திருத்தி கொள்ளுமாறு கூறினார்.
அதோடு விவசாயிகளிடமிருந்து ஒரு பைசா வாங்கினால் கூட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சரிடம் தெளிவாக கூறினார். இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயிகளிடம் இருந்து ஒரு பைசா வாங்கினால் கூட ஸ்டாலின் தலைமையிலான அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என அவர் கூறியுள்ளார்.” இதனைத் தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி விவசாயிகள் நெல்லிற்கு ஒரு பைசா கூட கொடுக்கத் தேவையில்லை என கூறியுள்ளார்.