உத்திரபிரதேசத்தில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளியை என்கவுண்டரில் சுட்டுள்ளனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த லல்லு யாதவ் என்கிற வினோத் யாதவ் என்பவர் பிரபல ரவுடி ஆவர். தேடப்படும் குற்றவாளியான இவர் மீது 82 கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. இந்நிலையில் போலீசார் இவனை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனையடுத்து மாவூ மாவட்டத்தில் உள்ள பான்வர்பூர் என்ற பகுதியில் லல்லு யாதவ் இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் அவனை கைது செய்ய சுற்றிவளைத்துள்ளனர். அப்போது தப்பிக்க முயன்ற லல்லு யாதவ் அவரிடம் இருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட்டுள்ளான். மேலும் இதனை பார்த்த மற்றொரு காவல்துறை அதிகாரி அவனை என்கவுண்டரில் அவனை சுட்டுள்ளனர். இதனால் லல்லு யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.