Categories
தேசிய செய்திகள்

தப்லீகி ஜமா அத் மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தற்கொலை முயற்சி… காப்பாற்றிய மருத்துவர்கள்!

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மர்கஸ் மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மர்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகத்தில் இருந்து 1,500 பேரும், கர்நாடகா, தெலங்கானா, காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கலந்து கொண்டுள்ளனர். அதில், மதக்கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் தமிழ்நாடு, தெலங்கானா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் இந்த அமைப்பின் கிளைகளுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிஜாமுதீன் பகுதியை சுற்றிவளைத்த போலீசார் அங்கிருந்த 300 பேரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சுமார் 1,200 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது. அதில் 441 பேருக்கு நோய் அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்களின் விவரங்கள் குறித்து அனைத்து மாநில அரசுகளும் சேகரித்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்ற 190 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், மஸ்கர் மசூதியில் இருந்த 300க்கும் மேற்பட்டோரை மருத்துவமனைகளில் வைத்து அரசு கண்காணித்து வருகிறது. அதில், டெல்லி ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தனிமைப்படுத்தப்பட்டிருந்த அறையில் இருந்து ஜன்னல் வழியாக குதிக்க முயன்ற போது மருத்துவர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Categories

Tech |