தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என கோஷமிட்ட அதிமுக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனிக்கு திரும்பினார்.அதன் பின்னர் பல அமைச்சர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.இதனை அடுத்து சென்னை திரும்பாமல் தேனியிலேயே முகாமிட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் தேனியில் நாகலாபுரத்தில் நடைபெறவிருக்கும் “நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை” தொடக்கி வைப்பதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டார்.
அப்பொழுது வழியெங்கிலும் ஓபிஎஸ் தொண்டர்களும்,பொதுமக்களும் “தமிழகத்தின் வருங்கால முதல்வரே” என கோஷம் எழுப்பினர்.மேலும் தமிழகத்தின் அடுத்த முதல்வரே என எழுதப்பட்ட 100 அடி நீளமுள்ள பேனரும் வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தின் அடுத்த முதல்வரே என்ற இந்த கோசம் அதிமுக தொண்டர்கள் இடையே தற்போது யார் அடுத்த முதல்வர் வேட்பாளர்? என குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.