தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இந்நிலையில் விஜய் தமிழக அரசியலுக்கு வருவாரா அல்லது புதுச்சேரி அரசியலுக்கு வருவாரா என கேள்வி எழுந்துள்ளது.இதனிடையே அடுத்த பொதுத் தேர்தலின் போது கட்டாயம் விஜய் அரசியலுக்கு வந்து நேரடியாக போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்சி ஆனந்தை இன்று விஜய் ரசிகர்கள் சந்தித்தனர்.இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி விஜய் வாழ்க என அவர்கள் கோஷமிட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.