தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் பள்ளிக்கு ஆர்வமுடன் சென்று வருகின்றனர்.
இதற்கிடையில் ஒரு சில பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அப்பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்புத்துள்ளது.