Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் ஊரடங்கு…. அரசு அதிர்ச்சி தகவல்..!!

தமிழகத்தில் மினி ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சுகாதாரத்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அனைத்து கட்டுப்பாடுகளையும் அமல் படுத்தி வருகின்றது. மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அதிகம் பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா பாதித்த வீதிகள், உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறிய நிலையில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Categories

Tech |