Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் ஊரடங்கு… டாஸ்மாக் கடைகள்… வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் கொரோனா தொற்று குறைந்த பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தற்போது மீண்டும் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே கோவையில் அதிகரித்து வரும் கொரோனாவால் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவித்திருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் தொற்று அதிகம் உள்ள காரணத்தினால் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |