தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் ஸ்டாலின்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் மொழியின் வீழ்ச்சி, தமிழர்களின் நலன், தமிழினத்தின் தனியுரிமை, வணக் கொள்கைக்கு எதிரான மண்ணுரிமை, சமூக நீதி, மாநில தன்னாட்சி, எழுவர் விடுதலை, மதவாதத்திற்கு எதிரான போர் போன்றவற்றில் சமரசமின்றி நின்று நிலை பெற்று தமிழகத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவிக்கிறேன். என நாம் தமிழர் கட்சியின் சீமான் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.