Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் நிழல் அமைச்சர்களாக 2 பேர்…. யாரெல்லாம் தெரியுமா?….. மாஜி அமைச்சர் பரபரப்பு தகவல்….!!!

நாமக்கல் மாவட்ட பள்ளிபாளையம் நேரு திடலில் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் வைகை செல்வன் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களால் அதிமுகவுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது திமுகவின் சாதனை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடியார் இந்த இயக்கத்தை வழிநடத்தி செல்வார். பொங்கல் பரிசு அதிமுக ஆட்சிக்காலத்தில் உயர்த்தி கொடுத்த நிலையில் திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு வழங்கப்பட்ட பொருட்களில் என்னென்ன இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். ரூ.1000 கூட முழுதாக கொடுக்கவில்லை. திமுக அரசு வரிகளை கொரோனாக்காலம் என்பதால் உயர்த்த மாட்டோம் என்று சொல்லிவிட்டு சொத்து வரி குடிநீர் மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. திமுக அரசு மின் பராமரிப்பு செய்தால் மின்தடை ஏற்படுவதாக கூறுகிறது.

ஆனால் கடந்த 10 அதிமுக அதில் மின்வெட்டு இல்லாமலும் மின் கட்டணம் உயர்த்தப்படாமலும் இருந்தது. மின்தடை இல்லாமல் வினியோகம் செய்யப்பட்டது. திமுக ஆட்சி வரும் போதெல்லாம் மின் கட்டணம் உயர்வு மட்டும் அல்ல மின்வெட்டு ஏற்படும் என்பதற்கு உதாரணமாக ஆட்சி பொறுப்பேற்ற காலத்தில் தான் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து குமாரபாளையம் உள்ள நகர மன்ற தலைவர் மைக்கிலையே பேசுகிறார். ஊர் எல்லாம் கஞ்சா, மது கடை, லாட்டரி விற்பனை நடைபெறுகிறது என்று கூறுகிறார். பள்ளி பாளையத்தில் நகர மன்ற தலைவர் தனது லேட்டர் பேப்பரில் பள்ளிபாளையம் நகர பகுதியில் கஞ்சா லாட்டரி மது விற்பனை செய்வது அதிகரித்துள்ளதாக கடிதம் எழுதினார் . திமுக ஆட்சியில் தமிழகத்தில் கொள்ளை, கொலை கொலை அதிகரித்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு பேசிய வைகை செல்வன், தமிழகத்தின் முதல்வர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. நிழல் முதலமைச்சராக இரண்டு பேர் செயல்பட்டு வருகின்றனர். ஒன்று சபரீசன் மற்றொன்று உதயநிதி. இதுதான் திராவிட மாடலா?. அனைத்து ஊர்களிலும் ஜி ஸ்கொயர் கொண்டு வருகின்றனர். இதன் மூலம் ரூ.2 கோடி இடம் ரூ.1 கோடிக்கு பெறப்பட்டு அதன் மூலம் று.10 கோடி வரை வியாபாரம் செய்கின்றனர். இதுதான் திராவிடம் மாடலா?. முதல்வர் என்ற அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் தட்டிக் கேட்க வேண்டாமா? முதலமைச்சராக திமுகவின் குடும்பத்தை தவிர வேறு யாரு வர முடியாது. அதிமுக பொருத்தவரை அடிமட்ட தொண்டனும் பொதுச்செயலாளராக வரலாம் என்பதற்கு எடப்பாடி ஒரு எடுத்துக்காட்டு. மேல எடப்பாடியார் இல்லையெனில் 66 சட்டமன்ற உறுப்பினர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றிருக்குமா. மேலும் அதிமுகத் தொண்டர்கள் மூல. அமைக்கப்பட்ட அஸ்திவாரத்தை யாராலும் எளிதில் வீழ்த்தி விட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |