தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீலகிரி மற்றும் கோவை யில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதனால் தேனியில் கனமழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லைமற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இதனை தவிர பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.