Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தின் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் தட்டுப்பாடு….? மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிரடி உத்தரவு….!!!!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர்க்காரணமாக  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். இந்த நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

அதாவது சென்னை அடுத்த மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தின் மூலமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குருடாயிலை சுத்திகரித்து அதிலிருந்து தரம் பிரித்து பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் என பல்வேறு இரு பொருள்களாக தயாரிக்கப்படுகிறது. இருந்த போதிலும் சில வாரங்களுக்கு முன் இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் துர்நாற்றம் வீசிய  காரணத்தினால் அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் திருவெற்றியூர் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதி துர்நாற்றம் வீசியதை  தொடர்ந்து மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வாரியத்தை சேர்ந்த அதிகாரிகள் சிபிசிஎல் ஆலையை ஆய்வு செய்து குடியிருப்பு பகுதி மக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆலை  உற்பத்தி இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் சுற்றுச்சூழல் மாசுபடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு 100 சதவீத உற்பத்தியை 25% குறைக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிஎல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருப்பதால் பெட்ரோல்  சமையல் கேஸ் டீலர்கள் கவலை அடைந்து இருக்கின்றனர். தொழிற்சாலை உற்பத்தியை குறைத்தாலும் மக்கள் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு தங்குத்துறையில்லாமல் எரிபொருள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கையின் அடிப்படையில் உற்பத்தி 25% குறைக்கப்படும் போது விநியோகஸ்தர்கள் சப்ளை தட்டுப்பாடு வராமல் நிர்வகிக்க வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோல் நிலைய உரிமையாளர் சங்க தலைவர் முரளி கூறி உள்ளார். அதேபோல சமையல் கேஸ்  உபயோகிக்கும் பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் விநியோகஸ்தர்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |