தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், இழுபறியும் நீடித்து வருகிறது. அந்தவகையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக கட்சி தொகுதி ஒதுக்கிடுவதில் ஏற்பட்ட அதிருப்தியில் காரணமாக தேமுதிக விலகியது. இதனால் மக்கள் நீதி மையம் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் தேமுதிக அதை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் பேசுகையில், “சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு பெருன்பான்மை கிடைக்காவிட்டால், தாம் யாரையும் ஆதரிக்க போவதில்லை என்றும், மூன்றாம் அணி தலைமையில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலருக்கு உயர்த்துவதே எங்கள் இலக்கு” என்று தெரிவித்துள்ளார்.