Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக…. புதிய விமான நிலைய திட்டம்….!!!

புதிதாக விமான நிலையம் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சுற்றுலாத்துறை, துறைமுகங்களில் சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, விமான நிலையங்களில் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்றவைகள் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் குறிப்பாக சுற்றுலா பயணிகளின் வருகை என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் சென்னையில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ஒரு வருடத்திற்கு 2.2 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த விமான நிலையத்தை  தற்போது விரிவாக்கம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க பணிகள் முடிவடைந்த பிறகு 3.5 கோடி பயணிகள் வரை வந்து செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்காக அரசு டிட்கோ நிறுவனத்துடன் தமிழக அரசு இடத்தை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டது. இந்திய விமான நிலைய ஆணையம் பரந்தூரில் புதிய விமான நிலைய அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளது. இந்த புதிய விமான நிலையத்தில் ஒரு வருடத்திற்கு 10.10 கோடி பயணிகள் வரை வந்து செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படுவதால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1 லட்சம் கோடி டாலரை அடையும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Categories

Tech |