தமிழக கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் லண்டன் ஐபிசி வானொலி அறிவிப்பாளருமான அப்துல் ஜப்பார் இன்று உயிரிழந்தார்.
தமிழக கிரிக்கெட் வர்ணனையாளர், லண்டன் ஐபிசி வானொலி அறிவிப்பாளருமான சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் இன்று உயிரிழந்தார். அவர் காற்றின் மொழி, அழைத்தார் பிரபாகரன் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு இவர் நெருங்கிய நண்பர்.
தொலைக்காட்சி பிரபலமாகாத சமயத்தில், வானொலியில் கிரிக்கெட் வர்ணனை செய்து, தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் இவர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.