தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கி உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வணிகவரித்துறை அமைச்சரான மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையில் கொரோனா தொற்றால் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Categories