தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தேனி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்காசி, மதுரை, திண்டுக்கல், சேலம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.