தமிழகத்தில் கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு தமிழக அரசு க்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், அனைத்து மாநில அரசுகளும் ஒமைக்ரான் காரணமாக வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். உடல் வெப்பநிலையை கண்டறிதல், வைரஸ் பாதிப்பு, கொரோனா மாதிரிகளை ஆய்வுக்கு விரைவாக அனுப்பி வைத்தல் ஆகியவற்றை துரிதப்படுத்த வேண்டும்.
தமிழகத்தைப் பொருத்தவரை டிசம்பர் 3ஆம் தேதியுடன் நிறைவடைந்த 30 நாட்களில் வேலூர், திருவள்ளூர், சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. எனவே இந்த மூன்று மாவட்டங்களிலும் பரிசோதனை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.