Categories
மாவட்ட செய்திகள்

“தமிழகத்தின் 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு நள்ஆளுமை விருது”….. தமிழக அரசு அதிரடி….!!!!

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 4 மாவட்ட ஆட்சியருக்கு நல்ஆளுமை விருது வழங்கி தமிழக அரசு கௌரவித்துள்ளது.

நாடு முழுவதும் வரும் திங்கட்கிழமை 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அலங்கார ஊர்திகள், காவலர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்திலும் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கப்படும் .

அந்த வகையில் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் திருவள்ளூர், திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நல்ஆளுமை விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை காவல் ஆணையர், செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலர், வேளாண்மை பொறியியல் துறை முதன்மை பொறியாளருக்கு நல்ஆளுமை விருது அறிவிக்கப்பட்டது.

Categories

Tech |